மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பில் மன்னார் நகரில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையிலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்பட்டு வருவதால் இவ்விடத்தில் தொழில்புரியும் ஊழியர்களுக்கும் கடமைபுரிவோருக்கும் தற்பொழுது கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

வியாழக் கிழமை (24.06.2021) மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் 494 நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை (25.06.2021) இங்கு 100 நபர்களுக்கு இவ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றோய் பீரீஸ் தெரிவித்தார்.