மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

(மட்டக்களப்பு மாவட்ட நிருபர்) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக இன்று (25) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

கிரீன் லைப் லைன் அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்ட பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கும் குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரண்டாம் கட்டமாக ஒரு தொகை பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற் கள பணியாளர்களாக களத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் சிலரிற்கும் சுகாதார உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கே.கிரி சுதன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி உதயகுமார், கிரீன் லைப் லைன் அமைப்பின் பணிப்பாளர் வீ.எஸ்.ரமணிதாஸ் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.