திருமலை மாவட்ட செயலக பொசன் போயா தின நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி மாவட்ட செயலக பக்திப்பாடல் குழுவினர் பிரத்தியேக வாகனம் மூலம் பக்தி கீதங்களை நகர்சார் பிரதேங்களில் பவனிவந்து பாடும் வகையிலான ஒழுங்குகள் நேற்று (24)மாலை மாவட்ட செயலக வளாகத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது நிலவும் கொவிட் அசாதாரண சூழ்நிலையாலும் பயணக்கட்டுப்பாடுகளாலும் பக்தர்கள் பொசன் போயா தின அனுஷ்டாங்களை மேற்கொள்ளமுடியாததை முன்னிட்டே இப்பிரத்தியேக ஏற்பாடு பகதர்களின் நலன்கருதி அரசாங்க அதிபரால் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இப்பக்திபாடல் குழுவினர் முக்கியமான வீதிகளில் பாடல்களை பாடுவதுடன் நாட்டுக்கு ஆசிவேண்டியும் வலம்வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்இமாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்