மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கர்ப்பினித் தாய்மாருக்கு கொடுப்பனவு.

 

(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினூடாக போசாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பினித் தாய்மாருக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (23.06.2021ம் திகதி) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்படி சர்வதேச அமைப்பான உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினூடா வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு தெரிவு செய்யப்பட்டு ஆரேக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்கில் போசாக்கு குறைந்த கப்பிணி தாய்மாகளுக்கு இரண்டு மாதக் கொடுப்பனவாக ஒரு குடும்பத்திற்கு10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இதில் இப்பிரதேசத்தில் உள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன்
கரவெட்டி சமுர்த்தி வங்கிப் பிரிவில் 154 பேரும் புதுமண்டபத்தடி வங்கிப் பிரிவில் 204 பேருமாக 358 கர்ப்பினித் தாய்மார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினால் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்நிதி வழங்கப்பட்டு பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கிகள் மூலமாக உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாக கொவிட் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, வங்கிகளிலும், சமுர்த்தி அலுவலகங்கள் மற்றும் உரிய நபர்களின் வீடுகள் போன்ற இடங்களில் இக்கொடுப்பனவினை வழங்கி வைத்தனர் இதன்போது முகாமைத்துவப் பணிப்பாளர் க. தங்கத்துரை , வங்கி முகாமையாளர்களான பிரியதர்சினி அசோக்குமார், என். ஜெயசீலன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து இந்நிகழ்வில் பங்கு பற்றினர்.