பி.சி.ஆர், அன்டிஜன் முடிவுகளின் பிரகாரம் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் விடுவிக்கப்படும்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் முடிவுகளின் பிரகாரம் குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தமை காரணமாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட. மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் கடந்த 11 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகளின் படி குறித்த பகுதி விடுவிக்கப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.