கொவிட் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள்.

கொவிட் நோய்த்தொற்றுக்கான ஏராளமான   தொற்றாளர்கள் ஆடை தொழிற்சாலைகளிலிலேயே பதிவாகியுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சீக்கிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்தார்.
பல தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று இருப்பதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால், எதிர்காலத்தில் தொழில் வீழ்ச்சியடையும் அதிக வாய்ப்பு இருப்பதாக திரு. உபுல் ரோஹனா சுட்டிக்காட்டுகிறார்.