மட்டக்களப்பில் நேற்றுஎகிறிய கொவிட்262. கிழக்கில்402

கிழக்கு மாகாணத்தில் என்றுமில்லாதவாறு நேற்று 402பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரத்திணைக்களத்தின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 262பேரும், திருகோணமலையில்98பேரும், கல்முனையில் 37பேரும், அம்பாறையில் 05பேரும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் 05மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் மட்டக்களப்பில் மூன்று மரணங்களும்,அம்பாறை01, திருமலை 01 என பதிவாகியுள்ளது.