கொரோனா மையவாடியில் தற்காலிக கொட்டகைகள் பாவனைக்கு.

கொரோனாவினால் மரணிக்கின்ற  பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஜ்மா நகர் மையவாடிக்கு வரும் உறவினர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பாதுகாப்புத்தரப்பினர், சுகாதாரத்துறையினரின் நன்மைகருதி அமைக்கப்பட்ட இரு தற்காலிக கொட்டகைகள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் காத்தான்குடி நகர சபை என்பன கொழும்பு, கொஹுவெலயில் இயங்கி வரும் அல்நூர் சமூக சேவை நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரின் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் செய்யத் முஹம்மத் அலியார் மற்றும் நிறுவனத்தின் பிரதித்தலைவரும், நிதிப்பனிப்பாளருமான கலாநிதி ரிப்கி ரம்ஸான் ஹாஜி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேற்படி நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏறாவூரைச் சேர்ந்த நழீமின் மேற்பார்வையின் கீழ் குறித்த தற்காலிக தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 

இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், ஆறாவது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி, அல்நூர் சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் செய்யத் முஹம்மத் அலியார், ஓட்டமாவடி மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.