தாளங்குடாவில் 5, 1/2 அடி நீளமான டொல்பின் இறந்தநிலையில் கரையொதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நிருபர்

மட்டக்க்களப்பு  5, 1/2 அடி நீளமான மேலுமொரு டொல்பின் தாழங்குடா கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
அத்துடன் கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட 1 டொல்பின் மீனும் இன்று (19) கரையொதுங்கியுள்ளது.

இன்னும் பல ஆமைகள் கடலில் அடைந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 21 ஆம் திகதி X-Press Pearl கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்பின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின்  பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக  எடுத்துச் சென்றுள்ளனர்.

அம்பாரை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பி உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர்,  குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.