அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு முன்னைநாள் அதிபருக்கு பிரியாவிடையுடன் புதிய அதிபர் பதவியேற்பு.

(செல்வி) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திஃகோ இராமகிருஷ்ணாமகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபராக கடமையாற்றிய டேவிட் அமிர்தலிங்கம் பதவியுயர்வுடன் (14) இடமாற்றம் பெற்று செல்கின்றார்.

ஆளுமையான சிறந்த தலைமைத்துவம் கொண்ட அதிபராக 2013 முதல் இடமாற்றம் பெற்று செல்லும் வரை கடந்த 07 வருடங்களாக இப்பாடசாலையில் சேவையாற்றி வந்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாகவும்  அரசறிவியலில் முதுகலைமாணி பட்டத்தையும்  யாழ்பாண பல்கழைக்கழகத்தில் கல்வி முதுமாணி பட்டத்தையும்  பெற்றுக்கொண்ட இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டத்தின் பின் கல்வி டிப்ளோமாவில் அதி சிறப்பு சித்தியும் பெற்றார்.

இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 ஐ சேர்ந்த இவர் 2012ல் இடம் பெற்ற போட்டி பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவை -2 ற்கு தெரிவு செய்யப்பட்டார்.2018ல் இலங்கை அதிபர் சேவை வகுப்பு -1 ல் பதவியுயர்வு பெற்று இப்பகுதியில் இயங்கும் சகோதரப்பாடசாலையான இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
18 வருடங்களாக சிறந்த பண்புமிக்க ஆசிரியராகவும் 01 வருடம் ஆசிரிய ஆலோசகராகவும் ஏறத்தாள 8 வருடங்களாக சிறந்த தலைமைத்துவமிக்க ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். இந் நிகழ்வானது கொரோனா நிலவரம் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுகளுடன் இடம்பெற்றதுடன்.புதிய அதிபராக ரவிலேகா நித்தியானந்தனும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.