மட்டு போதனா வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ருபா பெறுமதியான ஒட்சிசன் வழங்கும் உபகரணம் கையளிக்கும் நிகழ்வு.

(ந.குகதர்சன்)மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா நிலைமை காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் இன்னும் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுள் 20 பேர் ஒட்சிசன் தேவையு டையோராக காணப்படுகின்றனர். இதன் நிமித்தம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சையளிப்புக்கான முக்கிய வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை
மொரட்டுவ பல்கலைகழகத்தின் 93ம்ஆண்டு பிரிவு மாணவர்கள் சிலோன் கொலிஜ் நிறுவனத்தின் ஊடாக 20 இலட்சம் ருபா பெறுமதியான ஒட்சிசன் வழங்கும் உபகரணம் வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி.க.கலாரஞ்சினி தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் மட்டு போதனா வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மொரட்டுவ பல்கலைகழக 93ம்ஆண்டு பிரிவு மாணவ பிரதிநிதிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர;.