பிறப்பு, இறப்பு பதிவும் பந்தாடப்படும் மக்களும்.

(முர்சித்)வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகள் மீண்டும் ஓட்டாமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகள் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதிவிடும் நடைமுறை இருந்தது இப்பதிவாளர் பிரிவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கடிதத்தின்படி 31.05.2021ம் திகதி வாழைச்சேனைப் பிரதேச செயலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனை உடனடியாக இடை நிறுத்தி வழமை போன்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவில் வைக்குமாறு பிரதேச முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமடிடம் முன்வைத்த கோறிக்கையையடுத்து பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் கடந்த 04.06.2021ம் திகதி அரசாங்க அதிபரின் கடிதம் பதிவாளர் நாயகத்தினால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டது.

மீண்டும் தொடர்ச்சியான அரசியல் தலையீட்டினால் 09.06.2021ம் திகதி பதிவாளர் நாயகத்தினால் மீண்டும் நிரந்தரமாக இரத்துச் செய்யப்பட்டு நிரந்தரத்தீர்வு கிடைக்க பெற்றுள்ளது.

மீண்டும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகள் அனைத்தும் ஓட்டமாவடி பதிவாளர் பிரிவில் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விடயத்தில் முயற்சி மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிற்கு கல்குடா முஸ்லிம் சமூகச் செயற்பாட்டாளர்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.