வாழைச்சேனையில் பிறந்த பிள்ளைக்கு ஓட்டமாவடியில் பதிவுவைப்பதா?(முன்னாள் எம்.பி அரியநேந்திரன்)

 

(வி.ரி.சகாதேவராஜா) வாழைச்சேனையில் பிறந்த பிள்ளைக்கு ஓட்டமாவடியில் பதிவுவைக்கின்ற அவலநிலை இன்னும் தொடர்கிறது.அதை மாற்ற பிள்ளையான் முயற்சித்தபோது முஸ்லிம்அரசியல்வாதிகள் எதிர்த்தனர். அரசாங்கங்கள்; தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருகிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டு.மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விசனத்துடன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் மாறி மாறிவரும் அரசாங்கங்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துக்கு முன்னரிமையளிக்கப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து கூறுகையில்..
அரசாங்கம் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குகின்றதாக இருந்தாலும் சரி அல்லது அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற தமிழ் கட்சிகள் என்றாலும் சரி தமிழ் அரசியல்தரப்பின் கருத்தைவிட மாறி மாறி வரும் அனைத்து அரசாங்கமும் ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துக்கே செவிசாய்ப்பதாகவே உள்ளன.

குறிப்பாக இரண்டு உதாரணங்களை கூறலாம்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கின்றவரும் மட்டக்களப்பில் அதிகூடிய வாக்குகளை பெற்றவருமாகிய அரசாங்கத்துடன் நெருக்கமாக உள்ள சிவநேசதுரை சநதிரகாந்தன் மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் அவரின் முயற்சியால் வாழைச்சேனை மக்கள் அதிகம் பதிவு செய்யும் மாற்றப்படாமலிருந்த பதிவாளர் காரியாலயத்தை ஓட்டமாவடியில் இருந்து வாழைச்சேனைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் கடந்த நான்காம் திகதி அமைச்சின் செயலாளரினால் அந்த காரியாலயம் மீளவும் ஓட்டமாவடிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் எம்பிக்களும் எதிர்கட்சியில் இருக்கும் முஸ்லிம் எம்பிக்களும் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

இரண்டாவது உதாரணமாக நான் கூறுவது கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் ஒரு நியாயமான கோரிக்கையாக இருந்தும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை கடந்த முப்பது வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தும் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்தும் அதற்கு தீர்வு இல்லை அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடைபோட்டுக்கொண்டே வருகின்றார்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நல்ல வாய்ப்பு இருந்தும் பிரதமர் ரணில்விக்கரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபாலவும் அதனை செயற்படுத்தாது ஏமாற்றியிருந்தார்கள்.
குறிப்பாக மக்கள் கூறுகின்ற விடயம் என்வென்றால் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதனை செய்யவில்லை என்பது அதை ஒரு உதாரணமாக கூறலாம் .
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றாக கோரிக்கைவிடுத்தும் அது நடந்தபாடில்லை இந்த அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்றாலும் சரி கடந்த நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னாலும் சரி முன்வைக்கும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு எந்த அரசும் முஸ்லிம் அரிசியல்வாதிகளின் கோரிக்கைக்கே முன்னுரிமை வழங்குகின்றனர் இவ்வாறு தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றுப்படுகின்றார்கள்.