மட்டு.மாவட்டத்தில் பயணத்தடையை மீறுவோர் பரிதாபம்.

(ரீ.எல்.ஜவ்பர்கான்)மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை கடுமையாக அமுல் படுத்தப்பட்டு வருகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொலிசாரும் இராணுவத்தினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியவசிய தேவைகள் தவிர ஏனைய வாகனங்கள் பொலிசாரினால் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் பொலிசார் அதிகமான இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

அதிகளவிலான பொலிசாரும் இராணுவத்தினரும் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளில் இடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.