கோடா தயாரித்த இரு இளைஞர்கள் கைது.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோடா மற்றும் கசிப்பு தயாரித்த இரு இளைஞர்கள் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கிரானை தட்டாவெளி எனும் பகுதியில் வைத்தே 20 மற்றும் 26 வயதுகளுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 420 லீற்றர் கோடா 20 லீற்றர் கசிப்பு மற்றும் தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து கைது செய்யப்பட இருவரையும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.