சுகாதார சிற்றுழியர்கள் போராட்டம்.

(அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சிற்றூழியர்கள் இன்று (11) காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வைத்தியசாலைகளுக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

வைத்திய சேவையினை ஒப்பிட்டு 78 வீதம் கொடுப்பனவு அதிகரிப்பினை வழங்குதல்.

பொது நிர்வாக சுற்றறிக்கை இப்படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்குமாறு எங்களுக்கு விடுமுறை நாள் கொடுக்கவும் வழங்குதல்.

கோவில் நைன்டீன் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தொழிற்சங்க குழுவை நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியம் ஆகும் போது அதற்கு சுகாதார செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல்.

வைத்தியசாலை கோவை குழுவிற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற்சங்க பங்குபற்றுதலுடன் வைத்தியசாலை ஆலோசனைக் குழு மீண்டும் நடைமுறைப்படுத்தல்.

பதலீட்டு இஅமையு சுகாதார ஊழியர்களை நிரந்தரமாக்குதல்

அனைத்து சுகாதார ஊழியர்களின் ஆட்சியர் செய்தல் வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல்

போன்ற 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது

இப் போராட்டத்தினை சுகாதார தொழிற்சங்க ஒன்றிணைப்பு ஏற்பாடு செய்திருந்தது.