மண்முனை தென்மேற்கு பிரிவிலும் தடுப்பூசி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அரசசேவை நிலையங்களில் சேவையாற்றும் உத்தியோகர்த்தர்களுக்கு சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று(09) முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உத்தியோகர்த்தர்கள் 96பேருக்கும் ஏனைய உத்தியோகத்தர்கள் 4வருக்குமாக 100டோஸ்கள் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகளில் முதல் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.