சிவானந்தா தேசிய பாடசாலையின் புதிய அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

(படுவான் பாலகன் ) களுதாவளையைப் பிறப்பிடமாககவும் , முனைக்காட்டை புகுந்த வீடாகவும் கொண்ட திரு.நவரெத்தினம் சந்திரகுமார் அவர்கள் இன்று (09.06.2021) மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபராக கடமையைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.

01.10.1992 ஆம் ஆண்டு கணித விஞ்ஞான ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர்,2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று,13.11.2009 இல் தேசிய பாடசாலை அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, 01.03.2010 இல் மட்/ புனித மிக்கேல் கல்லூரியில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர்  01.06.2017 இல்
மட்/ புனித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டார்.

கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாடசாலை நிர்வாகத்தில் பட்டப்பின் கல்விமாணி, கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா, கல்வி முகாமைத்துவ த்தில் விஞ்ஞான முதுமாணி, ஊழியர்சட்டம் மற்றும் நிர்வாகச்சட்டத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஆகிய வற்றையும், கல்வி துறை சார்ந்த கல்வியில் முது கலைமாமணி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணி, தத்துவத்தில் முதுமாணி, உளவியலில் கலைமுதுமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 30 வருடகாலமாக ஆரம்பக்கல்வி, விஞ்ஞானம், கணிதம்,விவசாயம் மற்றும் க.பொ.த உ.த விவசாய விஞ்ஞானம் சார்ந்த 278 க்கும் அதிகமான பாடத்துணை நூல்களை எழுதி தமிழ் பேசும் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.