ஓட்டமாவடியில் 29 கொரோனா தொற்றாளர்கள்.

(ந.குகதர்சன்) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் படி 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்;று செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பட்டதன் பிரகாரம் 29 கொரோனா தொற்றாளர்கள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளா நபர்களின் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள் மற்றும் பயணத்தடையினை மீறி வீதியில் பயணம் செய்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.