கந்தளாய் பிராந்திய சுகாதார பிரிவில் முதியவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள்

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

சைனா பார்ம் வகையைச் சேர்ந்த தடுப்பூசிகள் இன்றைய தினம்(8) கந்தளாய் பிராந்திய சுகாதார அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
தடுப்பூசியின் தாக்கம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெளிவுபடுத்தினார்.
முதியவர்கள் வாகனங்களில் தமது உறவினர்களுடன் சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.