அபயம் அமைப்பினால் 10லெட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு 

(படுவான் பாலகன் ) அபயம் அமைப்பினால் 10லெட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சுகாதார ஊழியர்களை தொற்றில் இருந்து பாதுகாக்கும்  வேலைத்திட்டத்தின்  இன்று(07) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக  உதவி வழங்கும் குறித்த அமைப்பானது, முகக்கவசம்,  கையுறை, தொற்று நீக்கும் பதார்த்தம், பாதுகாப்பு உடைகள் போன்ற உதவிகளை இதன் போது வழங்கியது.
இதனை குறித்த அமைப்பின் சார்பில் முன்னாள் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எல்.எம்.நவரட்னராஜா, மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமநாத், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  முரளீஸ்வரன், மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி தி.தவனேசன் ஆகியோரிடம் கையளித்தார்.
குறித்த அமைப்பானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.