கொவிட் மட்டக்களப்பில் நடந்த சம்பவம்.

மட்டக்களப்பில் கொரனா தொற்றுக்குள்ளாகி சிசிச்சைபெற்று வீடுதிரும்பிய நிலையில் நான்கு நாட்களுக்குப்பின் 58வயது நிரம்பிய  ஒருவர் மரணித்தசம்பவமொன்று இன்று  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது கொவிட் தொற்றுக்காக சிசிச்சைபெற்று கடந்த நான்கு நாட்களுக்குமுன் வீடுதிரும்பிய நபர் நெஞ்சுவலிகாரணமாக இன்று அதிகாலை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை  மரணமடைந்துந்துள்ளார்.

மரணத்தின்பின் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்  மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனாசாலை  வட்டாரங்கள் தெரிவித்தன..