உலகக் கிண்ண போட்டிக்கு உதயமாகும் கிண்ணியா வாலிபன்.

(எப்.முபாரக்) 2022 – FIFA உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான தகுதிகான் போட்டிக்களில் இலங்கை நாட்டின் சார்பாக விளையாடுவதற்காக கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரி பழைய மாணவர் அக்ஸேரியன் விளையாட்டு வீரருமான ஜே.எம்.றிப்கான் முகம்மட் கொரியா நாட்டிற்கு செல்லவிருக்கிறார்.

இவர் கடந்த மூன்று வருடங்களாக கொழும்பில் பொலிஸ் உதைபந்தாட்ட விளையாட்டு அணிக்காக விளையாடி வந்துள்ளார்.

இந்த வருடம் இலங்கை இராணுவ அணியில் இணைந்து விளையாடிக் கொண்டு வருகிறார்

இவர் இலங்கை உதைபந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவரையும்  இவரை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரள மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான்- மகரூப் , மற்றும் எம்.எஸ்.தௌபீக், ஆகியோரும்

மற்றும் கிண்ணியா அக்ஸேரியன் சுப்பர் லீக் நிருவாகம்இ கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதேச மக்களும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.