திருமதி. சுகந்தி வரதசீலன் (S.L.E.A.S- Class I)  ஓய்வு பெற்றார். 

(பொன்ஆனந்தம் )
கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக நிர்வாகத்திற்கு   பொறுப்பாக கடமையாற்றிய இவர் 5.6.2021உடன் தனது அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

திருமதி. சுகந்தி வரதசீலன் 1961ம் 6.6அன்று  நிலாவெளி  கிராமத்தில் வேல்முருகு (அதிபர் நிலாவெளி R.C.T.M.S), மகேஸ்வரி (பிரதி அதிபர் நிலாவெளி ம.வி) ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.
இவர் ஆரம்பக்கல்வியை தி/ நிலாவெளி ம.வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை தி/ மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, மட்/ வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்தார்.
க.பொ.த. உயர்தரக் கல்வியை தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியிற் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இவர் 1982ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார்.
பின்னர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக (I.S.A) திருகோணமலை கல்வி வலயத்தில் நியமிக்கப்பட்டார். சேவையிலிருந்து கொண்டே கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து திருகோணமலைக் கல்வி வலயத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆனார். பின்னர் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக  செயற்பட்டார்.
இவர் சேவையிலிருந்து கொண்டே  கல்விமாணி (B.Ed) பட்டத்தினையும், பின்னர் கல்வி முதுமாணு (M.Ed) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
  இவரது கணவர் சின்னத்துரை. வரதசீலன் அவர்கள் ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரியாவார். இவர் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் சில மேல்நிலைப் பதவிகளை வகித்தவராவார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
 திருமதி. சு. வரதசீலன் அவர்கள். நிர்வாகத்துக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி தனது 60வது வயதில் 05.06.2021 சேவையிலிருந்து ஓய்வு நிலையை அடைந்தார்.