அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில்  கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம்.

(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக” உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று(05) சனிக்கிழமை  இடம்பெற்றது .

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டத்தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர் நெறிப் படுத்தலில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப்பணிப்பாளர் கே.எல்.சுபைரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இம்முகாமில்  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத்தலைவர்  சஹிட் எம்.ரிஸ்மி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலாவது இரத்தம் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில்   அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 வை.எம்.எம்.ஏ.கிளைகளின் பதவி வழி உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இரத்தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் அவர்களின் வழிகாட்டலில், இரத்த வங்கியில் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரத்தான முகாமை நடாத்தினர்.

கொவிட் 19 நிலைமையைக் கவனத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக  பின்பற்றப்பட்டு  குறித்த இரத்ததான முகாம்  நடைபெற்றது.

பேரவையின் தேசியத் தலைவர் ஸஹீட் எம்.றிஸ்மி, இங்கு கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய அம்பாறை மாவட்ட பேரவை கிளை அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.