கிண்ணியா நகர சபை மைதானத்தில் என்டிஜன் பரிசோதனை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரிய கிண்ணியா பகுதியில் எழுமாறாக இன்று(05)அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொவிட்19 தாக்கம் உள்ள நிலையில் முடக்கப்பட்ட கிண்ணியாவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் கிண்ணியா நகர சபை மைதானத்தில் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 62 நபரில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் தொடர் ஒத்துழைப்பினை என்டிஜன் பரிசோதனைகளின் போது வழங்குமாறும் சுகாதார தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.