ஏறாவூர்- 2 என்ற கிராம சேவை அதிகாரி பகுதியை தனிமைப்படுத்த சிபார்சு

(ஏறாவூர் நிருபர் நாஸர்)                                                                                       மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து                     ஊரின் ஒரு பகுதியை தனிமைப்படுத்துவதற்கு                        இன்று 05.06.2021  தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர் பிரதேசத்திற்கான கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் அவசர கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவகத்தில் நடைபெற்றது.
வைத்தியதிகாரி சாபிறா வசீம்,  பிரதேச செயலாளர்               நிஹாறா மௌஜுத்,  பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி               கீர்த்தி ஜயந்த, கொரோனா கட்டுப்பாட்டு கிழக்கு மாகாண செயலணியின் பிரதிநிதி இராணுவ அதிகாரி அனஸ் அஹமட் ,  சமூக , சமய  துறைசார் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதானவீதி தொடக்கம் நூறுஸ்ஸலாம் பள்ளிவாயல்  வீதி           அஸ்ஹர் பாடசாலை வீதி மற்றும்  ஓடாவியார் வீதி ஆகிய பாதைகளுக்கிடைப்பட்ட ஏறாவூர்- 2 என்ற கிராம சேவை அதிகாரி பகுதியை தனிமைப்படுத்தப்படுத்துவதற்கு                       சுகாதாரத்  துறையினரால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் 605 குடும்பங்களைச்சேர்ந்த 2420 பேர் வாழ்கின்றனர். குறிப்பாக ஏறாவூரில் இதுவரை 234 கொரோனா  தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா மூன்றாம் அலையில் மாத்திரம்   134 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூரில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகளவிலான             கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களின்         வாழ்வாதார நலன்களைக் கருத்திற்கொண்டு                        பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலத்தில் குறித்த பகுதி மக்கள் பீசீஆர் பரிசோதனைக்குட் படுத்தப்படவுள்ளனர்