பிரதேச சபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் அரிசி மற்றும் மரக்கறிவகை வழங்கிவைப்பு

(எஸ்.சபேசன்) தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் 200 பேருக்கு அரிசி மற்றும் மரக்கறிகள் நேற்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

அதவது எருவில் பாரதிபுரத்தில் வசிக்கும் மக்களுக்கும் களுவாஞ்சிக்குடி கடற்கரைப்பகுதியை அண்டி வசிக்கும் மொத்தம் 200 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது.

இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 வைரஸ் காரனத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் இவர் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது
தற்போது பல கிராமக்களுக்கு இவ் உதவியினை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதுடன் முதல் கட்டமாக 200 பேருக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.