ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நடமாடும் வியாபாரம்

நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வியாபாரம் மூலம் விற்பனை செய்யும் வகையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நடமாடும் வியாபாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் வழிகாட்டலிலும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட் ஹாதியின் மேற்பார்வையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.அஷ்ரப் தலைமையில் நடமாடும் வியாபாரம் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தங்கள் காலடிக்கு நடமாடும் வியாபாரம் மூலம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட் ஹாதி தெரிவித்தார்.