கோவில் குளம் ஆடைதொழிற்சாலையை 6ம் திகதி வரை மூட தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கோவில் குளத்தில் அமைந்துள்ள  ஆடை தொழிற்சாலையை எதிர்வரும் 6ம் திகதி வரை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

குறித்த ஆடை தொழிற்சாலை நிருவாகத்துடன் இன்று(29) நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த ஆடைதொழிற்சாலையில் கடந்த 15ம் திகதிக்கு பின்னர் தொழில் புரிந்த அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தி அவர்களுக்கான பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும்  கூறினார்.
மேலும், 6ம் திகதிக்கு பின்னர் தொழில்சாலையில் கடமையாற்ற உள்ளவர்களுக்கும் உரிய பரிசோதனைகளை மேற்கொண்ட பின்பே வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.