மட்டில் ஐந்து கைதிகளுக்கு தொற்று கொமர்சியல் கிரடிட்டுக்கும் பூட்டு.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று விடுவிக்கப்படவிருந்த 18 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட  அன்ரிஜன் பரிசோதனையில் 05பேருக்கு கொவிட்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்களில் 03பேர் மட்டக்களப்பு நகரைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை மட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள கொமர்சியல் கிரடிட் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுதொற்றுக்குள்ளான நிலையில் குறிப்பிட்ட நிலையம்   மூடப்பட்டுள்ளதுடன் நிலையத்தில் கடமையாற்றிய 30பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு இன்று இதுவரை 27பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.