பெரியகல்லாற்று வைத்தியசாலையில் இன்று மதியம் கோழிப்புரியாணி.

மட்டக்களப்பு பெரியகல்லாற்று வைத்தியசாலையில் சிக்ச்சைபெறும் கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று மதிய உணவாக கோழிப்புரியாணி வழங்கப்பட்டதாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒருவர் எமக்குத்தெரிவித்தார்.

குறிப்பிட்ட வைத்தியசாலையில் சிக்ச்சைபெறும் கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகுறித்து பல்வேறு முறைப்பாடுகளையடுத்து பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரனின் அதிரடி நடவடிக்கைகாரணமாக  உணவுஒப்பந்தக்காரர் மாற்றப்பட்டு புதிய ஒப்பந்தக்காரருக்கு நேற்று ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இதனையடுத்து இன்று மதியம் தொற்றாளர்களுக்கு கோழிப்புரியாணி வழங்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் சுபீட்சத்திற்கு தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்று தொற்றாளர்களுடனும் உணவு குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.