கொவிட் தொற்று கேணல் தர அதிகாரி மரணம்

கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக இறந்த முதல் இராணுவ அதிகாரியின் மரணம் இன்று (23)  பதுளை மருத்துவ மனையில் பதிவாகியுள்ளது.
இலங்கை பீரங்கிப் படையின்  கேணல் ஹேமக செனவிரத்ன  என்றஅதிகாரி தரத்திலுள்ளவரே  கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார்..
அவர் இறந்தபோது,  புத்தள அலுவலர்களின் தொழில் மேம்பாட்டு நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகராகவும் பணியாற்றினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.