மட்டு போதனாவைத்தியசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபா கொவிட் உபகரணங்களை வழங்கிய தொழிலதிபர்கள்.

மட்டக்களப்பில் உள்ள சிலதொழிலதிபர்கள் இணைந்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு இரண்டு மில்லியன் பெறுமதியான கொவிட் பரிசோதனைக்கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கொரோனா தடுப்பு செயலணியின் வேண்டுகோளிற்கிணங்க ரூபாய் 2 மில்லியன் பெறுமதியான Hydrogen Peroxide Vaporisier மற்றும் Nocolyse ஆகிய இரு மருத்துவ உபகரணங்களை தொழிலதிபர்களான எம். செல்வராஜா ( ஈஸ்ட் லகூண் ஹோட்டல்), வி. ரஞ்சிதமூர்த்தி (விஜய் கட்டிட ஒப்பந்தக்காரர்), ஜே.ஜெகதீசன் ( சகானா கலர் லேப்), எஸ் யோகேஸ்வரன் (சுபா கோல்ட் ஹவுஸ்), பி.சாந்தகுமார் (அஜந்தா ரேடர்ஸ்- செங்கலடி) மற்றும் கே.செல்வநாயகம் ஆகியோர் இணைந்து குறித்த உபகரணங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சணி கணேசலிங்கத்திடம்  வெள்ளிக்கிழமை கையளித்தனர்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட கொரோணா ஒழிப்பு செயலணியின் பிரதானியும் 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த,

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் தௌபீக்

மட்டக்களப்பு மாவட்டபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன், 231 ஆவது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வி.எம்.என். ஹெட்டியாராச்சி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் வி. தேவகாந்தன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்