நீரை ஓடவிட்டு மக்களை காப்பாற்றும் ம.தெ.எருவில்.பற்று பிரதேச சபை.

(எருவில் துசி) கொரோனா வைரசின் தாக்கம் மக்களை பரிதாபத்துக்குள்ளக்கியிருக்கும் நிலையில் டெங்கு தாக்கமானது மக்களை
அச்சுறுத்தும் வகையில் காணப்படுவதை கருத்தில் கொண்டு வடிகான்களை துப்பரவு செய்யும் பணியானது தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் பணிப்பரையின் பேரில் இன்று(23) எருவில் கிராமத்தில் நடைபெற்றது.

கொரோன அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெங்கு தாக்கமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக பெரிதும்
தாக்கும் அபாயம் காணப்படுவதனால் வடிகான்களில் தேங்கி நிற்கும் நீரினை அகற்றும் முகமாக துப்ரவு செய்யும் பணிகள் கிராமம் கிராமமாக மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் ம.தெ.எ.பற்று பிரதேச சபைக்குட்பட்ட எருவில் கிராமத்தில் உள்ள வடிகான்கள் எருவில் வட்டார பிரதிநிதி சி.காண்டீபன் அவர்களின் அழைப்பின் பேரிலும் மற்றும் இ.வினோதினி அவர்களின் பங்குபற்றுதலுடனும் இனங்கானப்பட்ட மழை நீர் தேங்கி நின்ற வடிகான்கள் துப்பரவு செய்யும் பணியானது நீர் வழிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டது.

இதனை சபையின் செயலாளர் விஸ்ணுகாந்தன் அவர்களின் வழிநடத்தலுடனும் சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.