மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையில் தொடரும் கொவிட் தொற்று.

மட்டக்களப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் யுவதிகள் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளாகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த ஒருவாரத்திற்குள் பலநபர்கள் தொற்றுக்குள்ளாகியபோதிலும் இன்றும் 12பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இருவரும் செங்கலடிப்பிரதேசத்தில் பதுளைவீதியில்  இருவரும் மற்றுமொரு பிரதேசத்தில் ஒருவரும் தொற்றுக்குள்ளாகி கொரனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.