கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசம்.

 

(எருவில் துசி) நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுபாட்டுக்கு மக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இன்று (23) மக்கள் வீடுகளுக்குள் முடங்கி தமது  பாதுகாப்பையும் ஏனைவர்களின் நலன் மீது அக்கறை கொண்டும் வெளியில் வராது வீடுகளுக்குள் முடங்கி கிடந்தமையினை அவதானிக்க முடிந்தது. கண்ணகி அம்பாளின்  சடங்கு காலத்தில் மக்கள் அதிகளவில் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவது வழமையானதாகும் இருந்தும் நாட்டின் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மக்களை வீடுகளில் இருந்து வழிபடுமாறு
அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைய மக்கள் செயற்படுவது பொருத்தமானதாகும் என சமூக ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.