கண்ணகியம்மனுக்கு திருமணச்சடங்கு! கட்டுண்ட மக்கள்.

(எருவில் துசி) எருவில் கண்ணகியம்மனுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் திருமணச்சடங்கானது கொரோனா வைரஸ் பயணக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் ஒன்று கூடுதல் தொடர்பான சட்ட  விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.

எருவில் கண்ணகி அம்பாளின் திருச்சடங்கானது 17.05.2021ந் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் திங்கட்கிழமை திருக்குளிர்த்தியுடன் நிறைவுபெறவுள்ளது. அந்தவகையில்
எருவில் கோப்பி குடி மக்களினால் பக்திபூர்வமாக திருமணச்சடங்கானது மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களை கொண்டு நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமை தாங்க கோப்பிகுல மக்களின் தலைவர் சீ.சத்தியநாதன் அவர்களின் வழிநடத்தலில் திருமணச்சடங்கு நடைபெற்றதும்
குறிப்பிடத்தக்கது ஆலய வண்ணக்கர் மற்றும் செயலாளர் மணியகாரர் ஆகியோருடன் குறிப்பிட்ட பக்த அடியவர்களுடன் நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றதனை காணலாம்.