வாழைச்சேனையில் இருபத்தியொரு நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனை

????????????????????????????????????

ந.குகதர்சன் –

வாழைச்சேனை  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில் தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்கள் இருபத்தியொரு நபர்களுக்கு இன்று சனிக்கிழமை பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்  தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராமம் முடக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் இருபத்தியொரு நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மாதிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பி.சீ.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்  தெரிவித்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????