வெறிச்சோடிய நிலையில் மட்டு மாவட்டம்.

(ஏறாவூர் நிருபர் நாஸர்)
கொரோனா தொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடன்    தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால்                மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களும் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

வீதிகள் வாகனப்போக்குவரத்தின்றி காணப்பட்டதுடன்             அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதிகளில்                       பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதான நகரங்கள்         சனநடமாட்டமின்றி காணப்பட்டன.