வவுணதீவில் சட்டவிரோதமாக கடத்திச் சென்ற போது கைப்பற்றப்பட்ட ஆறு மாடுள் அரச உடமையாக்கப்பட்டது.

(எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மாட்டுப்பட்டியில் இருந்த மாடுகளைத் திருடி சிறிய கென்டர் ரக வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கடத்திச் சென்ற போது கைப்பற்றப்பட்ட ஆறு  மாடுகளை  உரிமையாளர் உரிமை கோராததால், நீதிமன்ற கட்டளையின்படி அரச உடையாக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
அரச உடமையாக்கப்பட்ட ஆறு மாடுகளும் சனிக்கிழமை (22 ) அனுராதபுரம் அரச  மிருகவைத்திய கால்நடை பண்ணைக்கு பராமரிப்பதற்காக திணைக்கள வாகனத்தில் கெண்டு செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட்ட பொலிஸ். அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனையிலும் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமியின் வழிகாட்டலில், சி.லோஜிதன் (8626), ஜயசுந்தர (91132), வை. டினேஸ் (8656) ஆகியோர் அடங்கிய பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினரால்   கடந்த 06ம் திகதி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
வெசாக் மாத காலத்தில் இறைச்சிக்கு வெட்டுவதற்காக இம் மாடுகள் திருடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டபோது கைப்பற்றியதாகவும் வவுணதீவு பொலிஸ் நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.