விபத்தில் படுகாயமடைந்த யுவதி சிகிச்சை பலனின்றி மரணம்.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சுவிஸ்கிராமம் திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி எனும் 21 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (20) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவருடன் ஆடைத்தொழிச்சாலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வீதியை குறுக்கிட்ட மற்றுமோர் மோட்டார் சைக்கிளை கண்டு அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக வீதியில் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்