சீமெந்து லொறி வான் நேருக்கு நேர் மோதியதில் ஸ்தலத்தில் ஒருவர் பலி

(ஹஸ்பர் ஏ ஹலீம்_கதிரவன்)
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இன்று(22)அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் திருகோணமலை நோக்கி புறப்பட்ட வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. தம்பலகாமம் 99 ம் கட்டை பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது .இதில் வான் சாரதியான கண்டி வீதி, 5ம் கட்டை சீனக்குடா பகுதியை சேர்ந்த விராஜ் மதுசங்க வயது(28)எனும் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.