திருக்கோவில் பிரதேச தம்பட்டை மீன்பிடி இறங்கு துறைக்கான அடிக்கல் நட்டு வைப்பு

(திருக்கோவில் நிருபர் -எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பெரிய களப்பு மீனவர்களுக்கான மீன்பிடி இறங்கு துறை ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கொவிட் 19 சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் நேற்று இடம்பெற்று இருந்தன.

இவ் மீன்பிடி இறங்கு துறையானது மீன்பிடி அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி இறங்குதுறைக்கான வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மாவட்ட மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் ஆர்.அபராதன் மற்றும் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.