சட்டமா அதிபர் திணைக்களத்திலும் தமிழ் மொழிக்குப்பதிலாக சீனமொழி

சட்டமா அதிபர்திணைக்களத்தின் புதிய கட்டிடத்தில் அண்மையில்  அங்குராப்பணம்  செய்யப்பட்ட கட்டடமொன்றில் பொறிக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லில்அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழி உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் திஸ்யா வெராகோடா சட்டமா அதிபர் துறையை கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட பெயர்ப்பலகையில் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிக்குப்பதிலாக சீனமொழி சேர்க்கப்பட்டுள்ளது.

இதேசவளை கடந்த வாரம் இலங்கையில் உள்ள சீன  தூதரகம் இலங்கையின்  மும்மொழிசட்டத்தை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் குறித்து நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளை புறக்கணிக்கும் போது கவலைகளை எழுப்பியதை அடுத்து சீனதூதரகம் மேற்படி வேண்டுகோளை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.