நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள் .பிரதமர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் கோவிட் தொற்றுநோயை  கருத்தில் கொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லட்சுமன் மற்றும் அதன் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (21)  அலரிமாளிகையில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை சந்தித்தபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.