பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகளுக்கான ஒழுங்குகள்.

இன்று (21) இரவு 11.00 மணிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளின் செயல்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட பல முடிவுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, பயணகட்டுப்பாட்டின்போது  மருந்தகம் திறந்திருக்கும்,  தேவைக்கேற்ப அருகிலுள்ள மருந்தகம் அல்லது மருத்துவமனைக்கு செல்லலாம்.

வெதுப்பகங்கள் திறந்த நிலையில் வைக்கப்பட்டு  நடமாடும் வாகனங்கள்  வெதுப்பக தயாரிப்புகளை விநியோகிக்க அனுமதிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், இலங்கையின் அனைத்து பொருளாதார மையங்களும் 24 மற்றும் 25   திகதிகளில் திறக்கப்படும். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொருளாதார மையங்களுக்கு கொண்டு வந்து கொண்டு செல்ல வருபவர்களுக்கு  அனுமதி தேவையில்லை என்றும் வர்த்தக அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

நடமாடும் வாகனங்கள் மூலம் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்க  அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.