பட்டிப்பளை சுகாதாரப்பிரிவில் இன்று முதலாவது கொவிட் மரணம்

மட்டக்களப்பு பட்டிப்பளை சுகாதாரப்பிரிவில் இன்று முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.முனைக்காட்டுகிராமத்தில் மரணமடைந்த வயோதிபப்பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மரணவீட்டில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றாவது அலைக்குப்பின் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 12பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.