களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் கூட்டம்.

(ரக்ஸனா)

இன்றையதினம் இரவு 11 மணிமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடமாட்டத்தையைக் கவனத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் பொருட்களை மும்முரமாக கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் தனியார் மற்றும் அரச வங்கிகளிலும் கொடுக்கல் வாங்கல்களுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.