காத்தான்குடி இளைஞர்களின் முன்மாதிரி மட்டு போதனாசாலைக்கு தினமும் உணவு.

(பலுதுல்லா பர்ஹான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான சமைத்த உணவினை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் அவர்களின் வழிகாட்டுதலில் கீழ் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஸா கிச்சன் இணைந்து. இன்று ,(20) வியாழக்கிழமை. தொடக்கம்  30 நாட்களுக்கு வழங்க முன் வந்துள்ளார்கள்

காத்தான்குடியிலும் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இதன் ஏற்பாட்டாளர்   ரசூல் தலைமையில் ஷா கிச்சன் கடந்த காலங்களிலும் இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

ஐக்கியம் சகோதரத்துவம் நல்லிணக்கத்துக்காக காத்தான்குடி சமூகம் இப்படியான செயற்பாடுகளில் முன்னின்று பங்களிப்புச் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு  உள்ளாகி உள்ளக விடுதியில் ( கோவிட் unit )  சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்  ஓர் அமைப்பு பணிப்பாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இதற்காக உதவி செய்ய விரும்புவர்கள் எங்களை நாடலாம்  என வைத்திய நிபுணர் டாக்டர் சுந்தரேசன் கேட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது